3 ஆண்டுகளுக்கு பிறகு வேகமா நிரம்பும் பெரும்பள்ளம் நீர்த்தேக்கம்

சத்தியமங்கலம் அடுத்த பெரும்பள்ளம் அணை மூனறு ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் நிலையில் உள்ளது. தினந்தோறும் 4 அடிநீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அணையின நீர்மட்டம் 6 அடியில் இருந்து 22 அடியாக உயர்ந்துள்ளது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் மலைஅடிவாரத்தில் அமைந்துள்ளது பெரும்பள்ளம் நீர்த்தேக்கம். இதன் நீர்மட்ட கொள்ளளவு 31 அடி. அதாவது 1.15 டிஎம்சி நீர் இருப்பு தேக்கி வைக்க இயலும்.  இந்த நீர்த்தேக்கம் மூலம் 22 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சத்தியமங்கலம்  அடுத்துள்ள கடம்பூர், அத்தியூர், கம்பத்ராயன்மலை, இருட்டிபாளையம் உள்ளிட்ட மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இதற்கு நீராதாரமாக உள்ளது. அணையில் நீர் இரும்பின்போது மீன் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த அணையில் தண்ணீர் இருக்கும்போது விவசாய கிணறுகளில் ஊற்றெடுக்கும்.



ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அணைக்கு நீர்வரத்து  முற்றிலும் நின்று போனது. இந்நிலையில் மாக்கம்பாளையம், கடம்பூர், அத்தியூர், கம்பத்ராயன்மலை, இருட்டிபாளையம் உள்ளிட்ட மலைப்பகுதியில் பெய்த  மழையால் வறண்டு கிடந்த பெரும்பள்ளம் அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தினமும் 200 கனஅடிநீர் வரத்து வந்துகொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் தினந்தோறும் 4 அடி உயர்ந்து தற்போது 22 அடியாக உள்ளது. கடந்த 14ம் தேதி 6 அடியாக இருந்து அணையில் நீர்மட்டம் தற்போது 22 அடியாக உள்ளது. நீர்இருப்பு 71 மில்லியன் கனஅடியாக உள்ளது. அணை வேகமாக நிரம்புவதால் முழுகொள்ளளவான 31 அடியை ஓரிரு நாளில் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று காலை பெரும்பள்ளம் நீர்ப்பிடிப்பு பகுதியில் 140 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது